2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மட்டக்களப்பில் வரட்சி: ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், தொடர்ச்சியாக நிலவும் வரட்சி காரணமாக, 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 32,426 குடும்பங்களைச் சேர்ந்த 105,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்றைய (27) தரவுகள் தெரிவித்தன.

இந்நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.கே.எம்.றியாஸ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அதிக வரட்சி காரணமாக, நீர்நிலைகள் வற்றிக் கொண்டே போகின்றன எனவும், குளங்களின் நீர்மட்டம் குறைவடைவதால், விவசாயிகள் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்றும், நன்னீர் மீன் பிடிப்பாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை போன்றவற்றின் உதவிகளுடன், குடிநீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் கூறினார்.

வரட்சி சம்பந்தமாக, சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர் பிரிவுகளிலும் அமைக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை, வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகக் கடமையாற்றுவதற்காகப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .