2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 2,362 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில், இதுவரை 2,362 பேர் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று, பிராந்திய சுகாதார பணிப்பாளர் எச்.எம்.அச்சுதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர்  திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில், செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வேலைகளுக்காகச் சென்று திரும்பிய 1,011 பேரும்  மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு, வேலை,  கல்வி நடவடிக்கைகளுக்காகவும் உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று வந்தவர்கள் 1,351 பேருமாக மொத்தம் 2,362 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

அவர்கள் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அசாதாரண நிலை ஏற்படும்போது, உடனடியாக  மருத்துவ நடவடிக்கை எடுப்பதற்கு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தயாரகவுள்ளதாகவும்  போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

96 படுக்கைகளைக் கொண்ட விடுதி ஒன்று, மூன்று வாரங்களில் தயார்ப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் சுகாதர அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோய் சந்தேக நபர்களாக,  36 பேர் இதுவரை அனுமதிக்கப்பட்டு அதில் தனிமைப்படுத்தலுக்காக 5 பேர் அனுப்பப்பட்டனர்.
ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுத்திப்படுத்தப்பட்டது. அவர், கொழும்பு தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிசைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .