2024 மே 14, செவ்வாய்க்கிழமை

மாநகரசபையின் உபவிதி உருவாக்கம் பற்றிய கலந்துரையாடல்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மாநகரசபையின் உபவிதி உருவாக்கம் பற்றிய கலந்துரையாடல் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் தலைமையில், நேற்று (30) மட்டக்களப்பு மாநகரசபை குழு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதுவரைக் காலமும் 1947 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க மாநகரக் கட்டளைச் சட்டத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சுகாதார நலன்பேணல் விடயங்களை தற்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கும், நவீனமயமாக்கலின் ஊடாக மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்டு தூய்மையான மாநகரை உருவாக்குவதற்கும் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், இரா. அசோக், மாநகர பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் உட்பட ஏனைய பலரும் கலந்து கொண்டு தமது கருத்துகளையும், உப விதி அமைவுக்கான ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .