2024 மே 08, புதன்கிழமை

மின் தடையால் அதிக சிரமம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 26 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மாவட்டத்தின் ஏறாவூர் - செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில், அடிக்கடி ஏற்படும் மின் தடையால், அன்றாட அலுவல்களில் அதிக சிரமத்தை எதிர்நோக்குவதாக, மின் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னறிவித்தல் ஏதுமின்றி அடிக்கடியும், சிலவேளை குறுகிய நேரமாகவும் சிலபோது ஒரு மணி நேரத்துக்குக் குறைவாகவும் கூடுதலாகவும், கடந்த சில வாரங்களாக இரவு, பகல் பாராது திடீரென மின் தடைப்படுவதாகவும், மின் பாவனையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தற்போது கடும் அனல் வெப்பக் காற்றுடன் புழுக்கமாகவும் இருப்பதனால், மின்சாரமும் தடைப்படும்போது, மின்பாவனையாளர்கள் அதிக அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திடீர் மின் தடை குறித்து, ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்துடன் தொடர்புகொண்டு கேட்டால், வழமையான திருத்த வேலைகள், அல்லது மின் அழுத்தங்கள் கூடிக்குறையும்போது ஏற்படும் நிகழ்வுகள் எனப் பதிலளிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த பல மாதங்களாக, ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில், பிரதி வியாழக்கிழமை தோறும் மின் விநியோக விஸ்தரிப்பு வேலைக்காக மின்சாரம் தடைப்படுத்தப்படுகின்றது.

அதற்கும் மேலதிகமாகவே, தற்போது தினமும் திடீர், திடீரென மின்விநியோகம் தடைப்படுத்தப்படுவதால் அதிக அசௌகரியங்களை மின் பாவனையாளர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன்காரணமாக, பல மின்னியல் சாதனங்களும் பழுதடைந்து விடுகின்றனவெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (25) முழுநாளும், பல தடவைகளுக்கு மேல் மின்சாரம் ஏறாவூரில் திடீர் திடீரெனத் தடைப்படுத்தப்பட்டமை, மின்பாவனையாளர்களை எரிச்சலூட்டியதாக, ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்கு எதிராக, சமூக ஊடக வலையமைப்புகளில் காரசாரமான கருத்துகள் தெரவிக்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X