2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் கோரி கடிதம்

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சின் கீழ் செயற்படுகின்ற பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ் கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமலுள்ள 04 மாதக் கொடுப்பனவுகளை வழங்குமாறு, ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவர் இரா.துரைரெத்தினம், கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன்  ஒவ்வொரு மாதமும் முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் அவர் கோரியுள்ளார்.

அக்கடிதத்தில், “கிழக்கு மாகாண கல்விப் பணியகம், அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கிய 17 கல்வி வலயங்களைக் கொண்டு,  1,681 பாலர் பாடசாலைகளையின் கீழ் 3,780 ஆசிரியர்களையும், 46,240 மாணவர்களையும் உள்ளடக்கி சிறப்பான முறையில் சேவையாற்றி வருகினதுஃ

“எனினும், போக்குவரத்துக்குக் கூட நிதி இல்லாமல் ஒருசில தேவைக்கு மட்டும் மாதாந்தக் கொடுப்பனவு 4,000 ரூபாயை நம்பி இருந்த இந்த ஆசிரியர்களுக்கு கடந்த 04 மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

“இவ் ஆசிரியர்களின் பொருளாதார சுமையைப் போக்குவதற்கும், இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அதிகரிக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தோடு,  இவர்களை ஆசிரியர் சேவையின் கீழ் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .