2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யானைகளை விரட்டும் செயற்பாடுகள் ஆரம்பம்

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில், காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் பெரும் அச்சுறுத்தல் விடுத்துவரும் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டியடிக்கும் விசேட செயற்பாடுகள் நேற்று (06) முழுநாளும் இடம்பெற்றது.

கிரான் பிரதேச மக்கள், அரச பணியாளர்கள், அரசியல்வாதிகள் இணைந்து இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இந்தச் செயற்பாட்டில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் 30 பேரும் சிவில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் 29 பேரும் பங்கேற்றுள்ளனர்.

கிரான்  பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் யானைகளின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலும் மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலும், இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .