2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடிகான்களையும் தோணாக்களையும் மாநகரசபை கையகப்படுத்துகிறது

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், க. விஜயரெத்தினம்

தனியாரால் சட்டவிரோதமான முறையில் அடாத்தாகப் பிடித்து உரிமை கோரிவந்த பாரிய வடிகான்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, மட்டக்களப்பு மாநகர அதிரடியாக மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், மட்டக்களப்பு, காத்தான்குடி எல்லைப் பிரதேசங்களிலுள்ள தோணாக்கள் சீர் செய்யும் வேலைத்திட்டம், மாநகர மேயர் தலைமையில் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த பல வருடங்களாக மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் நீர் வடிந்தோடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வடிகான்கள் மற்றும் தோணாக்களை, தனியார் சிலர் அடாத்தாகப் பிடித்து வேலியடைத்து உரிமை கோரி வந்தனர்.

இதனால் மழை காலங்களில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு வழியின்றி பாரிய வெள்ள அனர்த்தத்துக்கு, மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் முகங்கொடுத்து வந்தனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவனின் பணிப்பின் பேரில், குறித்த வடிகான்களையும் தோணாக்களையும் கையகப்படுத்தும் செயற்பாடுகளை, மாநகரசபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மழை நீர் வடிந்தோடும் வடிகான்களையும் தோணாக்களையும் சட்ட விரோதமாக அடைத்து, உரிமைகோரியோருக்கு கடிதம் மூலம் அவற்றை மாநகர சபையிடம் ஒப்படைக்கும்படி அறிவிக்கப்பட்டும், நோட்டிஸ் மூலம் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வந்த நிலையில், தற்போது மாநகரசபையின் அதிகாரத்தைப் பிரயோகித்து குறிப்பிட்ட அனைத்து வடிகான்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களிலுள்ள பிரதான வடிகான்களை, மாநகர சபை கையகப்படுத்துவதன் ஊடாக, மழை காலங்களில் கல்லடி, நாவற்குடா பிரதேசங்களில் பாரிய வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .