2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விவசாயத்துக்கு அதிக நிதி வழங்கியது ’நல்லாட்சி அரசாங்கம் மட்டுமே’

வா.கிருஸ்ணா   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலேயே, இலங்கையின் விவசாயத்துறைக்கு அதிகளவான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில், விவசாய செய்கையில் நவீன முறையிலான நீர்வழங்கல் முறை, வீதி அபிவிருத்தி, கால்வாய் புனரமைப்பு பணிகள் என்பன நேற்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் இறக்குமதிகளை நிறுத்தி, ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கு, விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அவர் கூறினார்.

இலங்கையில், மிளகாய் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பிரதேசமாக, களுதாவளை பிரதேசம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மிளகாய் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், “விவசாயத்தை நவீனமயப்படுத்​துவோம்” எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 935 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் உற்பத்திகளை பெருக்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே, இதன் பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .