2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிய காத்தான்குடியில் மேற் கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் புதன்கிழமை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளர் யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பேரில்   நாடாளுமன்ற உறுப்பினர்  செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் முயற்சியில் கம்பரெலிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 25 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காத்தான்குடி பதுரியா றிஸ்வி நகர் குறுக்கு வீதி மற்றும் பதுரியா றிஸ்வி நகர் முதலாம் குறுக்கு வீதி என்பன கொங்கிறீட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. பதுரியா றிஸ்வி நகர்  குறுக்கு வீதிக்காக 15 இலட்சம் ரூபாயும்,பதுரியா றிஸ்வி நகர் முதலாம் குறுக்கு வீதிக்கு 10 இலட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வீதி அபிவிருத்தி தொடர்பிலான விடயங்களை கலந்தாலோசிக்கும் மக்கள் சந்திப்பு கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் நாடாளுமன்ற செயலாளர் எஸ்.எம்.ஸப்றாஸ் ஆகியோர் கலந்து கொண்ட இந்த மக்கள் சந்திப்பில் வீதி  அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்பட முன்னராக குறித்த வீதியில் வசிக்கும் மக்கள் அவசியம் செய்து கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டன . இந்த மக்கள் சந்திப்பில் பதுரியா வட்டார ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் அமைப்பாளர் ஜஹானி,அப்பிரதேச  கட்சி முக்கியஸ்தர் றியாஸ் உட்பட பொது மக்கள்,பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .