2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

10 நாட்களாக தொடரும் லெமன்மோரா மக்களின் போராட்டம்

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்ட நிர்வாகம் தங்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என தெரிவித்து கடந்த 18 ஆம் திகதி முதல் ​லெமன்மோரா மக்கள் தொடர்போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் 188 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டிருந்தபோதிலும்  தோட்ட நிர்வாகம் திட்டமிட்டு அத்தோட்டத்தினை கடாக்கி வருவதாக குற்றும் சுமத்தியுள்ள அம்மக்கள், தற்போது 20 ஏக்கர் நிலத்திலேயே தேயிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது அங்கு மாட்டுப்பண்னை ஒன்றை அமைக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதில் ​வெளியிடங்களைச் சேர்ந்தோரே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

அத்துடன், “தங்களுக்கு முறையாக ஊழியர் சேமலாபநி;தி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியினை செலுத்த வேண்டும், முறையாக வேலை வழங்கப்பட வேண்டும், வீடமைப்பு திட்டத்திற்கு காணிகள் வழங்க வேண்டும்”, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள மக்கள் தோட்ட நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த முன்வர வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

தனியாருக்கு சொந்தமான  குறித்தத்  தோட்டத்தில் 32 குடும்பங்களை சேர்ந்த சுமார் 200 பேர் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .