2024 மே 09, வியாழக்கிழமை

‘100 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் பயன்படுத்தாமல் சிதைவடைந்துள்ளன’

சிவாணி ஸ்ரீ   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில், இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களில், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான காபட் கலவை செய்யும் இரண்டு இயந்திரங்கள், எவ்வித தேவைகளுக்கும் பயன்படுத்தாமல் சிதைவடைந்துள்ளது என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்தார். 

கேகாலை உதுகொட தன்னிமலை பிரதேசத்தில், 50 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள காபட் கலவை செய்யும் இடத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு, நிலைமைகளை நேரில் கண்டறிந்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

சப்ரகமுவ மாகாணத்தில், நாளாந்தம் 7,000 பேர் வறுமையில் உள்ள நிலையில், இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், 100 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள காபட் கலவை செய்யும் இரண்டு இயந்திரங்களும், எவ்வித தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து காணப்படுவதாகக் கூறிய அவர், இவற்றை, இன்னும் ஒரு வாரத்துக்குள் பாவனைக்குட்படுத்துமாறு, உரிய அதிகாரிகளுக்கு இதன்போது அவர் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X