2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2 தலைகளை மாற்றிய 2 பேருக்கும் பிணை

Kogilavani   / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா   

கல்விப் பொது தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையில், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  

சந்தேகநபர்கள் இருவரும், பதுளை நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (18) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, அவ்விருவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான் நயந்த சமரதுங்க, அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.   

லுணுகலை மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட பரீட்சை மத்திய நிலையத்திலேயே இவ்விருவரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு உரிய பரீட்சை இலக்கத்தை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டே, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

கிடைக்கப்பெற்ற இரகசியத் தக​வலையடுத்து, அந்தப் பரீட்சை நிலையத்தின் பொறுப்பாளர், லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்தே, அவ்விருவரையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.   

தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாடை, அவ்விருவரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, மாணவர்கள் இருவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான், அவர்களை பிணையில் விடுவித்தார். இதேவேளை, அவ்விரு மாணவர்களின் பெற்றோருக்கும் நீதவான் அறிவுரை கூறியனுப்பிவைத்தார்.   

இதேவேளை, எதிர்வரும் 2018ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 18ஆம் திகதியன்று, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணித்த நீதவான், இந்த விவகாரம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளரின் குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.   

பரீட்சைகள் ஆரம்பமானது முதல், நேற்று வரையிலும், ஆள்மாறாட்டத்தின் ஊடாகவே இவ்விருவரும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனரென, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .