2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

2000 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூள் மீட்பு; இருவர் கைது

Kogilavani   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ஆ.ரமேஷ்

கழிவு தேயிலைத் தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து விற்பனை செய்துவந்த  இருவரையும் கொட்டகலையில் வைத்து, பொலிஸார் இன்று மதியம் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 2000 கிலோகிராம் கழிவு தேயிலை தூளும் மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை மற்றும் திம்புள்ள-பத்தனையைச் சேர்ந்த இருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொட்டகலை நகர் மைதானத்துக்கு அருகிலுள்ள கட்டடம் ஒன்றில், கழிவுத் தேயிலையை லொறி ஒன்றிலிருந்து இறக்கிக் கொண்டிருக்கும் போது, திம்புள்ள பத்தனை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்துச் சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதுடன், இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி இருவரும், கடந்த ஒரு மாதத்தும் மேலாக, கழிவுத் தேயிலை தூளுடன் நல்ல தேயிலையை கலந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .