2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அதிகாரங்களை பகிராவிட்டால் எதிர்ப்பேன்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களுக்கு, அதிகாரங்கள் பகர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், அவ்வாறு இல்லாத பட்சத்தில், எதிர்ப்புகளை வெளியிட நேரிடும் என்றும் சாடியுள்ளார்.

பிரதேச சபைகளின் செயற்பாடுகளுக்கு, அம்பகமுவ பிரதேச செயலகம் இடையூறாக இருப்பதாக, அம்பகமுவ பிரதேச சபையின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்குப் பதிலளிக்கும்போதே, கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

இங்குத் தொடர்ந்து தெரிவித்த அவர், தான் பிரதேச சபையின் தலைவராகவும் மாகாண அமைச்சராகவும் பதவி வகித்து வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவே, மாகாண சபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.   

உள்ளூராட்சிமன்றங்களுக்கு இடையில், அதிகாரப் பகிர்வு முறையாக இடம்பெறவில்லை எனில் அதனை முற்றுமுழுதாக எதிர்ப்பதாகத் தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பில், நாடாளுன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு  செல்வதற்கும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.  

எனவே, இவ்விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .