2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’​அமைச்சுகள் ஒழுங்காகத் திட்டமிட்டிருந்தால் 20 ஆயிரம் தொழில் கிடைத்திருக்கும்’

கு. புஷ்பராஜ்   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தனை காலமும், மலையகத்துக்குக்காகச் செயற்பட்டு வந்த அமைச்சுகள், ஒழுங்கான முறையில் திட்டமிட்டுச் செயற்பட்டிருந்தால், தற்போது, 20 ஆயிரத்துக்கும் அதிகமான ​மலையக இளைஞர், யுவதிகள், அரச உத்தியோகத்தில் இருந்திருப்பர் என்று அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான கே. ஆர். கிசான் தெரிவித்தார்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை மாதச் சம்பளம், இலங்கை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக, ஜெனிவாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தமை தொடர்பாக, மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டம், நுவரெலியா, சினிசிட்டா மண்டபத்தில், நேற்று முன்தினம் (14) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையக மக்கள், அடிப்படை வசதிகளையே கோருவதாகக் கூறிய அவர், நாட்டின் தொழில் வாய்ப்புகளும், இனத்தின் மொழியை அடிப்படையாக்க கொண்டே வழங்கப்படுவதாகவும் இதனால், தொழில் ரீதியான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் வளங்கள், சமனாகப் பகிரப்படுவதில்லை என்றும் நாடு, பிரிவினை வாதத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரு முறை, ஊவா மாகாணத்தில், சச்சிதாநந்தன், 89,000 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்றும் ஆனால், அவருக்கு, முதலமைச்சர் பதவி வழங்காதமை, இதற்கு சிறந்த உதாரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற விடயங்களையே, ஐக்கிய நாடுகள் சபையில் தான் எடுத்துரைத்ததாகவும் ஐ.நா குழு, விரையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .