2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘ஆசிரிய நலன்களுக்காய் காத்திரமான நடவடிக்கை’

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அதிகாரிகளும் அவர்களை வழிநடத்தும் பின்னடைந்த அரசியல்வாதிகளும் ஆசிரியச் சமூகத்துக்கு எதிரான தத்தமது எதேச்சதிகார நடவடிக்கைகளை மீளாய்வு செய்துக்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ள, மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் இ.மஹேந்திரன், அப்படி அவர்கள் மீளாய்வு செய்யாதவிடத்து, மலையக ஆசிரியர் ஒன்றியம், கடுமையான நடவடிக்கைகளைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

பிரதானமான ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 13ஆம் திகதியன்று நடத்திய சுகயீன விடுமுறைப் போராட்டம் தொடர்பில், அந்த ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையி​லேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் இ.மஹேந்திரன் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தப் போராட்டம், மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், பொறுப்பற்று செயற்படும் கல்வி அதிகாரிகளின் எதேச்சதிகாரங்களுக்கு எதிராக ஆசிரியர்கள் தூக்கிய இப்போர்க்கொடி, கல்வி அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, அவர்களைத் தூண்டிவிடும் பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கும் ஒரு சாட்டையடியாகவே அமைந்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதேச்சதிகாரமான செயற்பாடுகள், இன்று அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக, என்றுமில்லாத வகையில், அதிகரித்துள்ள நிலையில், மலையக ஆசிரிய சமூகத்தின் இந்த ஒன்றுதிரண்ட எதிர்ப்பலையானது, என்றுமில்லாதவாறு நடந்தேறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இச்சக்தியின் வேகத்தை, ஆசிரியர்களின் தார்மீகக் கோபத்தை உணர்ந்து, இப்போதாவது கல்வி அதிகாரிகளும் அவர்களை வழிநடத்தும் பின்னடைந்த இந்த அரசியல்வாதிகளும் ஆசிரிய சமூகத்துக்கு எதிரான தத்தமது எதேச்சதிகார நடவடிக்கைகளை மீளாய்வு செய்துக்கொள்ளல் வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .