2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘ஆதரிப்பதில் பெருமடையகிறேன்’

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதையிட்டு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் என்ற வகையில் பெருமையடைவதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்

ஹட்டனில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக நாட்டில் நிலவும் ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிபீடம் ஏறினார். அதனடிப்படையில், முறைகேடு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு, நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

"அத்தோடு, ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் உயர் மட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணங்க, சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி வாழ்த்துகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .