2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆவணக் காப்பகத்தை நிறுவவுதற்கு ஏற்பாடு

Editorial   / 2019 ஜூன் 21 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக அரசியல் தொழிற்சங்க வரலாற்றுப் பணிகளை ஆவணப்படுத்தும் நோக்குடன், 'எங்கள் இ.தொ.கா' என்பதை முன்னிலைப்படுத்தி ஆவணக் காப்பகத்தை நிறுவுவதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இ.தொ.காவின் 80 ஆண்டுகால மக்கள் பணியை, எதிர்கால சந்ததியினருக்கும் வழங்கும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1939ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இ.தொ.கா என்ற அமைப்பு,  இன்று  ஆலயவிருட்சமாகப் பரந்தும் - விரிந்தும் அநேகருக்கு நிழல் கொடுக்கும், கனி தரும் அமைப்பாக மலையகமெங்கும் வியாபித்து பரந்து காணப்படுவதாக, அவ்வமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

எனவே இ.தொ.காவின் ஆவணக்காப்பகத்தில் வைப்பதற்காக,  இ.தொ.கா பற்றியதான வரலாற்றுக் குறிப்புகள், நூல் உருவில் வெளிவந்த புத்தகங்கள், புகைப்பட பிரதிகள், தகவல்களை   ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்குமாறு ஊடகப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

தகவல்களை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்பதாக, ஊடக இணைப்பாளர், 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் மேலதிக விவரங்களுக்கு,  071 6876548  070 5867977 ஆகிய அலைபேசி இக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் இ.தொ.கா கோரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .