2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்புளுவன்சா தாக்கம்; பாடசாலையின் முதலாம் வகுப்பு மூடப்பட்டது

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை உதுகொட கணன்கமுவ ராஜசிங்க பாடசாலையில், தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மூவர், இன்புளுவன்சா (ஏ) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதால், அந்தப் பாடசாலையின் முதலாம் வகுப்பு, மறு அறிவித்தல் வரை, இன்று (26) மூடப்பட்டதாக, பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.  

காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக, மேற்படி மாணவர்கள் மூவரும், கடந்த வாரம், உதகொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு, இன்புளுவன்சா (ஏ) வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டது.   

அத்துடன், பாடசாலையின் கல்விசாரா ஊழியர் ஒருவருக்கும், இன்புளுவன்சா (ஏ) வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ​மாணவரொருவரின் உறவினர் என்றும் தெரியவந்துள்ளது.   

இதனையடுத்து, பாடசாலையின் ஏனைய மாணவர்களுக்கு இன்புளுவான்சா (ஏ) வைரஸ் பரவக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டு, பாடசாலையின் முதலாம் வகுப்பை, காலவரையறையின்றி மூடியதாக, பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .