2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை - இந்தியா சமுதாய பேரவையூடாக அபிவிருத்தி

Gavitha   / 2021 ஜனவரி 10 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், இன்று (10), கொட்டகலையிலுள்ள சி.எல்.எப் வளாகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, மலையக மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை மேம்படுத்தும் பொருட்டு, பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக, இராஜாங்க அமைச்சரால் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கட்டட இடவசதியின்மை, மலசல கூடம், குடிநீர், விளையாட்டு மைதானம், நூலக வசதி இன்மை, தொழிநுட்பம், விஞ்ஞான ஆய்வுக்கூடம், ஆசிரியர் பற்றாக்குறை, அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக, பாடசாலைகளின் அதிபர்களால், இராஜாங்க அமைச்சரின் கவனத்துக் கொண்டு வரப்பட்டது.

அத்துடன், பாடசாலைகளில் நிலவிவரும் பௌதீக வளப்பற்றாக்குறை தொடர்பாகவும் பாடசாலை அபிவிருத்தி தொடர்பாகவும் அதிபர், ஆசிரியர்களால், கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு, இலங்கை-  இந்தியா சமுதாயப் பேரவை ஊடாக, பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளவும், பேரவையின் உயர்மட்ட அதிகாரிகளுடன், பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .