2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஏற்றுமதி விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

மொஹொமட் ஆஸிக்   / 2019 ஜூலை 15 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதி விவசாயத்துறையில், நவீன தொழில்நுட்பம், பயிற்சிகளை சாதாரண உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதன் ஊடாக, ஏற்றுமதி விவசாய உற்பத்தியை அபிவிருத்தி செய்து, தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு, தமது திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் திருமதி சாந்தா செனவிரத்ன தெரிவித்தார். 

இதற்காக, விண்ணப்பதாரிகளைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

பேராதனையிலுள்ள திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,  

ஆரம்பக் கைத்தொழில், சமூகவலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து, ஏற்றுமதி விவசாயத்தை ஊக்குவிக்கும் பகுதி ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் ஏற்றுமதி விவசாய உற்பத்தியாளர்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாகவும், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும், இது ஆரம்பிக்கப்பட் உள்ளதாகத் தெரிவித்தார்.  

கருவா, கராம்பு ​போன்ற வாசனைத் திரவியங்கள், சாதிக்காய் மிளகு, கோப்பி, கொக்கோ உற்பத்தியுடன் தொடர்புடைய விவசாயிகள், தமக்குத் தேவையான சேவைகளை இதனூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தினார்.  

பயிற்றப்பட்ட ஊழியர் பற்றாக்குறை, உரிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றாமை, உற்பத்தியில் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தாமை போன்றன, விவசாய உற்பத்தியில் போதிய அபிவிருத்தியை ஏற்படுத்தாமைக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது என்றார். 

மேற்படி பிரச்சினைகளுக்குத் தீர்வாக, நவீன தொழில்நுட்பத்துடனான விவசாய உற்பத்தி சேவைகளை வழங்கும் தனியார் முதலீட்டாளர்களை உருவாக்குதல், இதற்கு தீர்வு எனக் கருதப்படுகிறது. எனவே அதற்கான அறிவு, பயிற்சி, உபகணரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் என்பன, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தால் ஏற்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில், மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, பேராதனை கெட்டம்பேயிலுள்ள ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் 071-8168346 என்ற அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .