2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் முறை​யிடுவேன்’

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத். எச்.எம்.ஹேவா

3,000 இராணுவத்தினரைக் கொன்றதாக, கருணா அம்மான் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில், தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக, ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கே. கிர்ஷாந்த் தெரிவித்துள்ளார்.

டிக்கோயாவிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கருணா அம்மானின் கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் 30 வருட யுத்தத்தின் பின்னர் இந்த நாடு சமாதானத்துடன் பயணிக்கின்ற நிலையில், இனங்களுக்கிடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயல்கின்றமை சர்வதேச சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கருணாவின் இந்த அறிவிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் ஆற்றிய உரை தவறென நிரூபிக்கப்பட்டால் அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை அல்லது மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் பாம்புக்கு பாலை வார்த்தாலும் அது அதனது சுயரூபத்தை காட்டிவிடும் அதேப்போன்ற குணமுடையவரே கருணா அம்மான் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .