2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’கடுமையான ஆட்சி ​வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 28 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நதீக பண்டார

இலங்கை அபிவிருத்தி அடைய வேண்டுமெனில், சர்வாதிகாரமே அவசியம் எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க, அந்த ஆட்சி, மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கண்டியில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ​மேலும் தெரிவித்த அவர், 18 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சர்வாதிகார தன்மையை மட்டுப்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தை, நாடாளுமன்றத்துக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார் எனவும், நாட்டின் தற்கால நிலைமைகளுக்கமைய 18ஐ விடவும் வலுவான சர்வாதிகரம் கொண்ட திருத்தம் ஒன்று அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

லீ குவான், யூ மஹதீர் மொஹமட் ஆகியோரின் ஆட்சிகாலத்தில் அவர்களின் நாடுகள் உயர்வான பொருளாதார நிலைமையை அடைந்துள்ளதாகவும், அவ்வாறான சர்வாதிகாரிகள் பலர் இலங்கையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .