2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’’கட்டடங்களால் இயற்கை அழிந்தது’

ஆ.ரமேஸ்   / 2019 ஜூன் 07 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலங்களில் இடம்பெற்ற எல்லை நிர்ணயகத்துக்கு முன்னராக காலப்பகுதியில், நுவரெலியா பிரதேசச் சபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதியக் கட்டடங்களால், கூடுதலான இயற்கை வளங்கள் நாசமாகியுள்ளன என, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

நானுஓயாவில், புதிதாக திறக்கப்பட்டுள்ள பிரதேச சபையில் நேற்று முன்தினம் (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

சர்வதேச சூழல் பாதுகாப்புத் தி​னத்தையொட்டி, நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும், தத்தமது வீடுகளில் குறைந்தது 5 மரங்களையேனும் நாட்டி, அதைப் பராமரிக்க வேண்டும் என்றத் தீர்மானம், சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

நுவரெலியாவிலுள்ள இயற்கை மரங்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளதால், நுவலெரியாவிலுள்ள ​மக்கள், செயற்கை குளிரைத் தேடிச் செல்கின்றனர் என்றும் எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு, பிரதே சபை புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .