2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கால்வாய்கள் ஒழுங்கின்மையால் ஹட்டன் வீதிகள் மூழ்குகின்றன

Editorial   / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன் 

ஹட்டன் நகரில் மழை பெய்யும் காலங்களில், பிரதான வீதிகளிலும் கால்வாய்களிலும் நீர்ப் பெருக்கெடுப்பதற்கு, முறையான வடிகான் அமைக்கப்படாமையே காரணம் என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

அதிக மழை பெய்யும் காலங்களில், பிரதான வீதி முழுவதும் வெள்ளம்​ பெருக்கெடுப்பதாகவும் இதனால், வாகன ஓட்டுநர்கள் உட்பட, பாதசாரிகளும் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

இதேவேளை, வௌ்ளம் அதிகமாகக் காணப்படும் நேரங்களில், வாய்க்கால்கள் இருப்பது கூட தென்படாமல் போய்விடுவதாகவும் இவ்வாறு வாய்க்கால் தெரியாது நடந்து செல்லும் பயணிகளும் மாணவர்களும், வாய்க்காலுக்குள் விழுந்த அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  

தற்போது, ​மலையகத்தில் மழைக் காலம் ஆரம்பித்துள்ளமையாலும் பாடசாலை  கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளமையால், இந்நிலைமை தொடர்ந்தால், மேலும் அசௌகரியமும் அசம்பாவிதங்களும் இடம்பெறலாம் என்று, மக்கள் தெரிவித்துள்ளனர்.  

எனவே, ஹட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், இது தொடர்பாகக் கவனம் செலுத்தி, உடனடியாக வாய்க்கால்களை முறையாகப் புனரமைத்து, வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்குமாறு, அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .