2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டியதில் 20 பேர் பாதிப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்களை, குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட 20 பேர், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், பொகவந்தலாவை, பொகவானை தோட்டத்தில், இன்று காலை  11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட 20 பேரில், 18 பேர் பெண் தொழிலாளர்களென, வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில், பெண் தொழிலாளர்கள் ஆறுபேர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திருப்பியுள்ளனர் என்பதோடு, ஏனையோர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனரென, பொகவந்தலாவை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.

கற்பாறையொன்றின் அடிப்பகுதியில் இருந்த குளவிக் கூடே, கலைந்து வந்து தொழிலாளர்களைக் கொட்டியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள், குளவிக்கொட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் சற்றுக் குறைவடைந்திருந்த போதிலும், அண்மையக் காலங்களாக குளவிக்கொட்டும் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .