2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான இடம் 36 வருடங்களுக்கு பின்னர் திரும்பியது’

ஆ.ரமேஸ்   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கந்தப்பளை நகரில், பார்க் தோட்டக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான தரிசு நிலத்தை, 36 வருடங்களுக்கு பின்னர், நுவரெலியா பிரதேச சபை, நேற்று (06) முதல், தனது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.  

இது தொடர்பாக மேலும் கூறிய அவர்,  

கந்தப்பளை நகரில், பார்க் தோட்டக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த கூட்டுறவுச் சங்கக் கடை, கடந்த 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது தீயிட்டுச் சேதமாக்கப்பட்ட தினத்திலிருந்து, 36 வருடங்களால், புனரமைக்கப்படாது, தரிசு நிலமாகக் காணப்பட்டது என்று அவர் கூறினார்.  

இக்கூட்டுறவு சங்க கடையினூடாக, தேயிலை மலைத்தோட்டம், சந்திர காந்தி, பூப்பனை, பகலவத்தை, நோனா தோட்டம், கோட்லோஜ் ஆகிய தோட்டப்பகுதியுள்ள மக்கள் பயன்பெற்று வந்தனர் என்றும் உரிய நிர்வாகத்தினர், இப்பகுதியை புனரமைத்து, மக்களுக்கு சேவை வழங்குவதில் அக்கறைக் காட்டியிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.  

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில், 20 வருடங்களுக்கு மேலான காலப்பகுதில் கவனிப்பாரற்று காணப்படும் தரிசு இடங்களை, அரசாங்கத் திணைக்களச் சேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்ற அறிவித்தலுக்கு அமைய, தற்போது, தற்போது இந்தக் கூட்டுறவு சங்க இடமும் நுவரெலியா பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  

அந்த இடத்தில், பார்க் தோட்ட கூட்டுறவுசங்கத்துக்கு ஒரு தொகை வருமானம், பிரதேச சபையினூடாகக் கிடைக்கும் வகையில், அங்கு கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு,கேள்வி மனுக்களூடாக வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .