2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூட்டொப்பந்தத்தை அடுத்து இரத்தினபுரியில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உமாமகேஸ்வரி   / 2019 மார்ச் 11 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளக் கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், இரத்தினபுரி மாவட்டத்தில், பெருந்தோட்டங்களுக்கு வேலையாற்ற வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்தன.  

இரத்தினபுரி மாவட்டத்தில், 10 தோட்டக் கம்பனிகளைச் சேர்ந்த 52 தோட்டங்கள் உள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  

இது தொடர்பாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ஆர். ராஜமணி கூறுகையில்,  கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர், இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டத்துக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, கனிசமான அளவு அதிகரித்துள்ளது என்றும் கடந்த காலங்களைவிட, புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி சேவைக்காலக் கொடுப்பனவு மற்றும் விடுமுறைக் காலக் கொடுப்பனவு என்பன அதிகரிக்கப்பட்டுள்ளமையே, இதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.  

இதன்படி, மாதமொன்றில் 25 நாள்கள் வேலை செய்யும் தொழிலாளர் ஒருவருக்கு, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலக் கொடுப்பனவு, விடுமுறைக் காலக் கொடுப்பனவு என்பன, மொத்தமாக 5,000 ரூபாய்க்கு மேல் கிடைப்பதாகவும் இது குறித்து, தோட்ட மக்களுக்கு எடுத்துக் கூறியதையத் தொடர்ந்தே, தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்வதாகவும் அவர் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .