2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கெசல்கமுவ ஓயா அகலமாகியது

Editorial   / 2019 ஏப்ரல் 05 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

நோர்வூட் பிரதேசத்திலுள்ள, கெசல்கமுவ ஓயாவை 2அடி அகலப்படுத்துவதாகத் தெரிவித்து, 50 அடிவரை அகலப்படுத்திவிட்டனரென தெரிவித்த, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால், இவ்வாறு இரத்தினக்கல் அகழ்வு இடம்பெறுவதாகக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (4)  இடம்பெற்ற, குழுநிலை விவாதத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், மழைக் காலங்களின் போது, நோர்வூட் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகத் தெரிவித்து, கெசல்கமுவ ஓயாவை அகலப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க, ஒப்பந்த அடிப்படையில் சிலருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை 50 அடியாக அகலப்படுத்தியுள்ள அவர்கள், நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் இரத்தினக்கல் அகழ்வதை பொலிஸார் வேடிக்கைப் பார்க்கின்றனர்.  இந்தச் செயற்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை, பொலிஸார் அடித்துத் துரத்துகின்றனர்.  இதுவா எமது நாட்டின் சட்டமென, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார்.

கெசல்கமுவ ஓயாவை அகலப்படுத்தியதால், குறித்த  பகுதியில் முன்னரைவிட அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதென, அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அண்மையில் சுற்றுலா விசாவுக்காக அறவிடப்பட்டுவந்த கட்டணத்தை இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 6 மாதங்களில் 8 இலட்சம் சுற்றலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், விசா கட்டணத்தை இரத்துச் செயய்வதால் இலங்கை 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்க ​வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

விசா கட்டணத்தை நீக்குவதால், இலகுவாக போதைப்பொருள்  வர்த்தகர்களும் இலங்கைக்கு வந்துச் செல்வரெனத் தெரிவித்த பிமல் ரத்நாயக்க, விசா கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத சுற்றுலாப் பயணிகளால், இலங்கைக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகிறது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .