2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’கொசிப் ​ஜெர்னலிசம் வேண்டாம்’

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.செல்வராஜா

'எமது நாடு சுதந்திரமடையும் வேளையில், சகல இனத்தவர்களும் ஒற்றுமையுடனேயே செயற்பட்டனர். ஆனால் காலப்போக்கில், பிரிவினைகள், பிளவுகள், முறுகல்கள் ஏற்படத் தொடங்கின. தற்போதும் எமது நாடு நீறுபூத்த நெருப்பாக இருக்கும் நிலையை அவதானிக்க முடிகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேசிய நல்லிணக்கம், தேசிய சகவாழ்வு இந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 'கொசிப் ஜெனலிசம்' என்ற ஊடகக் கலாசாரத்திலிருந்து, ஊடகவியலாளர்கள் விடுபடல் வேண்டும்” என்று, போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

“தற்போதைய ஆட்சியில் நான் தொங்கிக் கொண்டிருப்பதால்தான், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம் மற்றும் ஊடகத்துறை பீடம் ஆகியனவற்றை என்னால் முன்னின்று செயற்படுத்த முடியாமல் போனது. எமது கட்சி ஆட்சி அமைந்திருக்குமேயானால், மேற்கண்ட எனது வேலைத்திட்டத்தை நான் முன்னின்று செயற்படுத்தியிருப்பேன்” என்றும் அவர் மேலும் கூறினார்.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சும் இலங்கைப் பத்திரிகைப் பேரவையும் இணைந்து, ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்றை, பதுளை, ஹெரிடேஜ் சுற்றுலா விடுதியில், நேற்று முன்தினம் நடத்தின. இச்செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதான அரசியல் கட்சிகளைவிட, சிறிய அளவிலான அரசியல் கட்சிகள் இனங்களையும் மதங்களையும் மையப்படுத்தியே செயற்பட்டு வருகிறன. இதன்மூலமே, அக்கட்சிகள் இயங்குகின்றன. இனங்களையும், மதங்களையும் முன்னிலைப்படுத்தாவிட்டால், இக்கட்சிகளுக்கு விமோசனம் கிடையாது. இக்கட்சிகளிடம் விரும்பியோ, விரும்பாமலோ மக்கள் சிறைக் கைதிகளாக இருந்து வரும் நிலையை அவதானிக்க முடிகின்றது.

“வாகன விபத்தொன்று ஏற்பட்டாலும் விபத்தில் காயப்பட்டவர் ஓர் இனமாகவும் விபத்தை ஏற்படுத்தியவர் ஓர் இனமாகவும் இருப்பாரேயானால், விபத்தில் காயப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வாகனத்துக்குத் தீவைப்பது, அவரது உடமைகளைச் சேதப்படுத்தவது, தாக்குவது இதுபோன்று இன முறுகல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பதற்றமும் பீதியும் ஏற்பட்டு, நாடு முழுவதிலும் அமைதியற்ற சூழல் ஏற்பட்டு விடுகின்றது'

இதுபோன்ற நிலைத் தொடர்வதற்கு அனுமதிக்கக்கூடாது. இவ்விடயத்தில், ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும். தேசிய நல்லிணக்கம், தேசிய சகவாழ்வை ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் பங்கும் அவசியம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .