2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கோவிலிருந்த தங்க நகைகள் திருட்டு

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்    

மேபீல்ட் தோட்டம், சாமஸ் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு, அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலி கொடி, கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, திம்புள்ள-பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது.

இச்சம்பவம், இன்று (14) அதிகாலை இடம்பெற்றிருப்பதாக, பொலிஸார் தெரிவித்தனர். மேற்படிக் கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி நடைபெற்றுள்ளதுடன்,  அம்மனுக்கு தங்க தாலி அணிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அணிவிக்கப்பட்ட நகையே, கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, கோவிலின் நிர்வாக சபை உறுப்பினர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுனர்.

முறைப்பாட்டை அடுத்து, திம்புள்ளை-பத்தனை பொலிஸார், நுவரெலியா பொலிஸின் குற்றத்தடுப்புப் பிரிவினர், கைரேகைப் பிரிவினர் ஆகியோர், கோவிலுக்கு சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

சம்பவத்துடன் தொடர்புயைட எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .