2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுகவீனப் போராட்டத்துக்கு முஸ்தீபு

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, மலையக ஆசிரியர் சங்கங்கள், மே மாதம் 9 ,10 ஆம் திகதிகளில், சுகவீனப் போரட்டத்தை முன்னெக்கத் தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஹட்டனில், நேற்று முன்தினம் (1) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், “கல்வித் திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் சம்பளம் அதிகரிக்கபட வேண்டும்; 2016ஆம் ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில், ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு, ஒய்வூதியம் அங்கிகரிக்கப்பட வேண்டும்; ஆசிரியர்களைச் சுதந்திரமாகச் செயற்பட இடமளிக்க வேண்டும் ஆகிய நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, மார்ச் மாதம் 13ஆம் திகதி, கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாகத் தெரிவித்தார்.

பின்னர் கடந்த 28ஆம் திகதி, ஒரு நாள் சுகவீனப் போராட்டத்தை நாடளாவிய ரீதியில், மேற்கொண்டதாகத் தெரிவித்ததுடன், இருந்த போதும், அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு, இதுவரையிலும் கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் இருந்து தீர்வு கிடைக்கவில்லை என்பதாலேயே, மே மாதம் 9,10ஆம் திகதிகளில், இரண்டுநாள் சுகவீனப் போராட்டத்தை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .