2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல்’

ஆ.ரமேஸ்   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பெருந்தோட்டக் கைத்தொழிற்றுறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இந்தவருடத்தின், முதல்தேர்தலாக ஜனாதிபதித் தேர்தலை  நடத்துவதை, எவராலும் தடுத்து நிறுத்த அனைத்து முடியாதென்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.  

நுவரெலியா, வலப்பனை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட மத்துரட்ட, கல்கடபத்தனை, எமஸ்ட், ஹைபொரஸ்ட் இலக்கம் 3 ஆகிய பகுதிகளில்,  நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்துள்ளார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  ஐ.தே.கவின் புதிய ஜனாதிபதி, ஜனாதிபதியின் ஆசனத்தில், அடுத்த வருடம் ஜனவரி மாதம், அமருவார் என்றும் சூளுரைத்தார்.  

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியைப் போன்று, ஐக்கிய தேசியக் கட்சி, ஒருபோதும் குடும்ப அரசியலை முன்னெடுக்காதென்றும் தெரிவித்த அவர், சகல தலைவர்களையும் உள்வாங்கிக் கொண்டு, ஜனநாயகப் பண்புகளுடனேயே, ஐ.தே.க செயற்படுமென்றும் தெரிவித்தார்.  

வருட இறுதிக்குள், நாடு புதுப் பொலிவு அடையக்கூடிய வகையில், அபிவிருத்திப் பணிகளை, ஐ.தே.க முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்காக நாடளாவிய ரீதியில், 166 அமைப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

அமைப்பாளர்களுக்கூடாக, ஒவ்வொரு பிரதேசங்களிலும் விசேட அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் தொழில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவு
ள்ளதாகவும் தெரிவித்தார்.  

ஐ.தே.கவின் அமைப்பாளர்களுக்கூடாக, அனைத்து வசதிகளையும் மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென்று நம்பிக்கை தெரிவித்ததுடன், இதற்கும் அப்பால், ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் பலப்படுத்த, மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

கடந்த வருடம் ஒக்டோர் மாதம், நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக, வலப்பனை பிரதேச மக்கள் முன்னின்றதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதற்காகத் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.  

நாட்டின் இறைமையைப் பாதுகாக்க, ஐ.தே.கவுக்கு மட்டுமே, சக்தியுள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியவர்களில், வலப்பனை பிரதேச மக்களும் உள்ளடங்குகின்றனர் என்று குறிப்பிட்டதுடன், எனினும், வலப்பனை பிரதேச மக்கள் அபிவிருத்தியில் பின்நிற்பதாகவும் கவலை தெரிவித்தார்.   கம்பெரலிய கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்டத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியில், தற்போது எஞ்சியுள்ள நிதி, வலப்பனை பிரதேச அபிவிருத்தித் திட்டத்துக்கென ஒதுக்கப்படுமென்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், வலப்பனை பிரதேசத்திலுள்ள அபிவிருத்திக் குறைபாடுகள் தீர்த்து வைக்கப்படுமென்றும் அதற்கான பணிகள் ஓரிரு நாள்களில் ஆரம்பிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .