2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜீ.பி.எஸ். திட்டத்துக்குள் முதல் விவசாய கிராமம்

Editorial   / 2018 ஜூலை 20 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத் திட்டத்துக்குள் முதல் விவசாயக் கிராமமாக, ஹப்புத்தளைக்கு உட்பட்ட கஹத்தேவல கிராமம் உள்வாங்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வேண்டுகோளுக்கு அமைவாக, மேற்படி கிராமத்தை ஜீ.பி.எஸ் தகவல் தொழில்நுட்பத் திட்டத்துக்குள் மேற்படி கிராமம் உள்வாங்கப்பட்டுள்ளதாக, கடற்படை அறிவித்துள்ளது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் சிறிமேவன் ரணசிங்கவின் மேற்பார்வையின் கீழ், கஹத்தேவெல கிராமத்திலுள்ள 208 விவசாயக் குடும்பங்களின் முழு விவரங்கள், மேற்படி குடும்பங்களின் வேளான்மை பற்றிய தகவல்கள், பல்லின உயிர்கள் தொடர்பான விவரங்கள், மண்ணின் இரசாயன நிலை, குடிநீர் மற்றும் நீர் நிலைகள் பற்றிய தகவல்கள், வானிலை மாற்றம், புவியியல் தகவல் போன்றவை ஜீ.பி.எஸ்.திட்டத்துக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .