2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம்; தெமோதரையில் பதற்றம்

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமோதர- நாவில தோட்ட முகாமையாளரை இடமாற்றுமாறு வலியுறுத்தி, அத்தோட்டத்தின் ​தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் தொழிற்சங்கப் போராட்டம், இன்று (22) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து.

இந்நிலையில் ஆர்ப்பட்டக்காரர்கள், வீதியில் டயர்களை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றமான சூழலொன்று ஏற்பட்டது.

தெமோதர- நாவில தோட்ட முகாமையாளர், தொழிலாளர்களிடம் அத்துமீறி நடந்துகொள்வதுடன், மதுபோதையில் தோட்டத் தொழிலாளர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் குறித்த முகாமையாளருடன் முழு தோட்ட அலுவலக அதிகாரிகளையும் இடமாற்றுமாறும் தெரிவித்தே, தொழிலாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளர்கள் வீதியில் டயர்களை எரித்து தமது எதிர்ப்யை இன்று (22) வெளிப்படுத்தியதால்,  அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு எல்ல  பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பில், வடிவேல் சுரேஷ் எம்.பியின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர், தொழிலாளர்களுடன் கலந்துரையாடியதுடன், தோட்ட நிறுவனப் பிரதானியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தோட்ட நிர்வாகப் பிரதானி, மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகத் தெரிவித்தப் போதிலும் முகாமையாளரை இடமாற்றுவதாக உறுதியளிக்காததால், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட மறுத்துள்ளதுடன், முகாமையாளரை இடமாற்றும் வரை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொ​ழிலாளர்களின் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை, தானும் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இதன்போது தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .