2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் காட்டுத்தீ

Editorial   / 2019 மார்ச் 04 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதியில், நேற்று முன்தினம் (02) பிற்பகல், காட்டுத்தீ ஏற்பட்டமையால், சுமார் 10 ஏக்கர் புற்றரை, முற்றாக எரிந்து நாசமாகியது.  

மலையகத்தில் சில பகுதிகளில், கடுமையான வெயில் காணப்படுவதால், சமீபகாலமாக, பல இடங்களில் இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டு வருகின்றது. இதனால், நீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  

இது இயற்கையாக ஏற்படுகின்ற காட்டுத்தீயா அல்லது இனந்தெரியாதவர்களால் வைக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரியவந்தால், பொதுமக்கள், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் முறையிடுமாறும் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .