2024 மே 02, வியாழக்கிழமை

’தலைமை மாறவேண்டும்’

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொ​ஹமட் ஆஸிக்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில், மாற்றமொன்று அவசியம் என, அக்கட்சியின் ​முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கண்டியில், மல்வத்த மகாநாயக்கத் தேரரை, நேற்று முன்தினம் (09) சந்தித்த பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை, ஒட்டுமொத்த மக்களது பிரச்சினையாகவே பார்க்கப்படுகின்றது என்று கூறிய அவர், இந்த நெருக்கடியை, விரைவில் இல்லாதொழிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒரு தரப்பினருக்குச் சாதகமாக அன்றி, மத்தியஸ்தமான தீர்வொன்றை வழங்கவேண்டும் என்பதே, தன்னுடைய கருத்து என்றும் இது தொடர்பில், மூன்று தலைவர்களும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, உடனடித் தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை, பொதுவேட்பாளராக நியமிக்குமாறு, ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபோது தான் கூறியதாகவும் எனினும், யாரும் அதைச் செவிமடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தான் கூறியதைப் போன்ற நடந்திருந்தால், நாட்டுக்கு இந்தப் பிரச்சினை இன்று ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.

கடந்த 24 ஆண்டுகளாக, ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தலைவராக உள்ளார் என்றும் 4 ஜனாதிபதித் தேர்தல்களுக்கு அவர் முகங்கொடுத்துள்ளார் என்றும் எனவே, கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று மக்கள் கருதுவதை, கட்சியின் தலைமை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .