2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திகா - உதயா நிவாரணப் பணி திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருள்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக, தமது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள மலையக இளைஞர், யுவதிகள் மற்றும் உறவுகளுக்கு கரம் கொடுக்கும் நோக்கில்,  திகா - உதயா நிவாரணப் பணி திட்டத்தின் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டு நாள்களுக்கு முன்னர், கொழும்பின் மொரட்டுவ, தெஹிவளை, கல்கிஸ்ஸ, களுபோவில, கொஹூவல, கிருளப்பனை, வெள்ளவத்தை, பம்பலபிட்டி ஆகிய பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதன் மற்றுமொரு கட்டம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் தலைமையில், இன்றைய(6)  தினம்,   முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு, கொட்டாஞ்சேனையைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிவாரணப் பொருள்களை வழங்கும் நடவக்கையில், மயில்வாகனம் உதயகுமார் ஈடுபட்டார்;.

இதற்கமைவாக, ஹோட்டன் பிளேஸ், ஆட்டுப்பெட்டித்தெரு, நீதிமன்ற வீதி, ஜெம்பட்டா வீதி, பரமானந்த வீதி, வாசல வீதி, ரட்ணம் வீதி, மத்திய வீதி மற்றும் கொள்ளுபிட்டி போன்ற பகுதிகளில் உள்ள மலையக உறவுகளுக்கு மயில்வாகனம் உதயகுமார் நேரடியாகச் சென்று நிவாரணப் பொருள்;களை வழங்கி வைத்தார்.

தொலைபேசி ஊடாக அழைத்து முன்னதாகவே தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்தவர்களுக்கு, இந்த நிவாரணப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், மட்டக்குளி, முகத்துவாரம், மருதானை, தெமட்டகொட, கொலன்னாவ, வெள்ளம்பிட்டி, பொரளை, நாராஹென்பிட்டி போன்ற பகுதிகளுக்கு விரைவில் நிவாரணப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் அதேவேளை, கொழும்பில் உள்ள மலையகச் சொந்தங்களுக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர் தலைமையில் சொந்த நிதியில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .