2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேசிய சபைக் கூட்டத்தில் செந்தில் - ராமேஸ்வரன் வாக்குவாதம்?

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டத்தில், ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமானும் மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் எம்.ராமேஸ்வரனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றுத் தெரியவருகிறது.

“இந்தியா அழுத்தம் கொடுத்துவருவதால், ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமாஸவுக்கு ஆதரவு வழங்குவோம்” என்று, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான்  கருத்துகளை முன்வைத்ததாகவும் ஆனால் அதனை மறுத்துள்ள மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் ம.ராமேஸ்வரன், “கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும்” என்று கூறியதாகவும் தெரியவருகிறது.

இதனால் மேற்படி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

எனினும் இருவரும் கலந்துரையாடி, இ.தொ.காவின் தேசிய சபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைவாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது என்று தீர்மானித்துள்ளனர்.

இ.தொ.காவின் தேசிய சபையில் சுமார் 300 உறுப்பினர்கள் ஆதரவு கோட்டாபய ராஜப்கஷவுக்கு இருந்துள்ளது என்றும் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .