2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தேயிலை​யை பின்தள்ளுவதே இலக்கு’

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025ஆம் ஆண்டு முன்னர், தேயிலையை பின்தள்ளி, நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை முதலிடத்துக்குக் கொண்டுச் செல்வதே, அரசாங்தக்தின் முக்கிய இலக்கு என, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். 

பிரதான நான்கு வாசனைத் திரவியங்களுக்கான முத்திரையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.  

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,  

கறுவா, மிளகு, கராம்பு, சாதிக்காய் ஆகிய நான்கு வாசனைத் திரவியங்களையும் பிரதிபலிக்கும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது என்றும் உள்நாட்டு வாசனைத் திரவியங்களின் பெறுமதியை மேம்படுத்துவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கும் துறைசார் உற்பத்தியாளர்களுக்கும் உயர்ந்தபட்ச நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் கூறினார். 

2025ஆம் ஆண்டுக்கு முன்னர், தற்போது முதன்மை ஏற்றுமதிப் பொருளாக இருக்கும் தேயிலையைப் பின்தள்ளிவிட்டு, வாசனைத் திரவியங்களை முதலாவது இடத்துக்குக் கொண்டுவருவதே, அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .