2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தோட்ட அதிகாரியையும் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

எம். செல்வராஜா   / 2020 ஜனவரி 28 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல பிரதேச செயலகத்துக்குட்பட்ட நாவில தோட்டம், தெமோதர தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக, கடந்த 9 நாள்களாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள், இன்று (28) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.  

ஓய்வு பெற்ற 4 தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை, கடந்த 2 ஆண்டுகளாக, தோட்ட அதிகாரி பெற்று வந்தார் என்பதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

சுமார் 500 பேர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் நாவில சந்தியில் இருந்து முன்னெடுக்கப்பட்டது.  

தோட்ட அதிகாரியையும் நிர்வாக ஊழியர்களையும் உடனடியாகப் பணி நீக்கம் செய்யுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த எல்ல பொலிஸார், மக்களுடன் கலந்துரையாடிய பின்னர், தோட்ட அதிகாரியுடனும் கலந்துரையாடியிருந்தனர். பின்னர், அதிகாரி, தோட்ட அதிகாரியின் காரியாலயம் மூடப்பட்டது.  

எனினும் தோட்ட அதிகாரி, ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் அவரை, இந்த ஆர்ப்பாட்டம் தொடரும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .