2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நோய்கள் பரவ விடமாட்டேன்’

ஆ.ரமேஸ்   / 2020 மே 25 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா  பிரதேசசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில்  நோய்கள் பரவலுக்கு இடங்கொடுக்கப் போவதில்லை என நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

அந்த வகையில், கொவிட் -19 உள்ளிட்ட டெங்கு, எலிக்காய்ச்சல் ஆகிய எந்தவொரு நோய்ப்பரவலுக்கும் இடம்கொடுக்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட மக்களின் சுகாதார நலத்திட்டங்கள் குறித்து, பிரதேச சபை அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வானிலை பிரச்சினை காரணமாக ஏற்பட்டுள்ள டெங்கு, எலிக்காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

எனவே, நுவரெலியா பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குரிய 13 வட்டாரங்களைச் சேர்ந்த 36 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்கள், சுகாதார மேம்பாடுகளை முன்னெடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .