2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாய்க் கடிக்குள்ளாகி 9,500 பேர் பாதிப்பு

பாலித ஆரியவன்ச   / 2019 ஜனவரி 16 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தில், கடந்த 2018ஆம் ஆண்டில்  மட்டும், 9,500 பேர், நாய்க் கடிக்கு இலக்காகியுள்ளனர் என்று, பதுளை மாவட்ட வைத்திசாலையின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பதுளை மாவட்ட வைத்தியசாலையில், நாய்க் கடிக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டோரின் புள்ளிவிவரத் தகவல்களை, வைத்தியசாலை வெளியிட்டுள்ளது. 

இதற்கமைவாகவே, கடந்த வருடத்தில், 9,500 பேர், நாய்க் கடிக்கு இலக்காகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இவ்வருடம், இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாமென்றும் பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதான நகரங்கள், தோட்டங்கள், கிராமங்களில், கட்டாக்காலி நாய்களிள் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. 

நாய்க்கடிக்கு உள்ளாகினால், நீர்வெறுப்பு நோய் ஏற்படுமென்பதால், பொதுமக்கள், அது தொடர்பில அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.  

இதேவேளை, கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள், அதற்கு தடுப்பூசிகளை முன்கூட்டியே ஏற்றியிருப்பது அவசியமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .