2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பணிப்பகிஷ்கரிப்பால் இயல்புநிலை பாதிப்பு

பாலித ஆரியவன்ச   / 2019 மார்ச் 27 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தின் ஊவா மாகாணத்துக்கு உட்பட்ட சுகாதார பணியாளர்கள், நேற்று (26) முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் 58 சுகாதார நிறுவனங்களின் அன்றாடப் பணிகள் பாதிப்படைந்தன.  

மேலதிகக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை, முற்கொடுப்பனவு வழங்குவதில் தாமதம், அம்பியுலன்ஸ் வண்டி சாரதிகளின் மேலதிகக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, சுகாதார பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 

ஊவா மாகாணத்துக்கு உட்பட்ட 17 சுகாதார வைத்திய நிலையங்கள், ஆதார வைத்தியசாலைகள் 05, மாவட்ட வைத்தியசாலைகள் 12, பிரதேச வைத்தியசாலைகள் 14 ஆகியவற்றில் பணியாற்றும் சுமார் 2200க்கும் மேற்பட்ட ஊழியர்களே, இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.  

இதன்காரணமாக, வைத்தியசாலைகளின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .