2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பதுளையை ஐ.தே.க ஆளும்’

Editorial   / 2017 டிசெம்பர் 22 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா   

“பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.   

ஐக்கிய தேசியக் கட்சியின் பசறை தேர்தல் தொகுதியின் பசறை பிரதேச சபைக்கான வேட்பு மனுவை, பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலர் நிமால் அபயசிறியிடம், நேற்று(21) சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களுக்கு அரசியல் மற்றும் வாக்குரிமைகளைப் பெற்றுக்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சியேயாகும். இதனை எமது மக்கள் நன்குணர்ந்துள்ளனர். அந்தவகையில், சிங்கள மக்களைவிட தமிழ் மக்கள், ஐக்கிய தேசியக் கட்சி மீது, அபாரப்பற்றுக் கொண்டிருக்கின்றனர்.   

“நடைபெறப்போகும் பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எனது தொகுதியான பசறை உள்ளிட்ட முழு மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியை, ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும்.   

“தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து,  பதுளையில் அமோக வெற்றியை நாம் பெறுவோம்.   

“எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியாக்கியவர்கள் நாங்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தினாலும், ஐக்கிய தேசியக் கட்சியே அவரை ஜனாதிபதியாக்கியது.   
“எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மில்லியன் கணக்கிலான ரூபாய்களை, வீதி அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளார்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .