2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பற்றைக்காடுகளுக்குத் தீ வைப்பதால் தேயிலையும் கருகிப் போகிறது

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்  

ஹட்டன் - ஸ்ட்ரத்தோன் தோட்டத் பிரிவுக்குட்பட்ட பற்றைக்காட்டுப் பகுதிக்கு வைக்கப்பட்டத் தீ காரணமாக, அப்பகுதியிலுள்ள தேயிலைச் செடிகளும் கருகியுள்ளன.  

அண்மைக்காலங்களில், மலையகப்பகுதியில் சில விசமிகளால் மேற்கொள்ளப்படுகின்ற தீ வைப்புச் சம்பவங்களால், பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. 

குறிப்பாக, மலையகத்தில் தொடரும் வரட்சி தீ வைப்புச் சம்பவங்கள் காரணமாக, அதிக வெப்பநிலை ஏற்பட்டு, தேயிலை உற்பத்தியும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. இவ்வகையான பிரச்சினைகளால், கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் வேலைநாள்களும் குறைக்கப்பட்டது. தவிரவும், இவ்வகையான தீ வைப்புச் சம்பவங்களில், சூழவுள்ள பெறுமதிவாய்ந்த மரங்களும் பாதிப்புக்குள்ளாவதாகவும் எனவே தீ வைக்கும் சம்பவங்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதினுடாகவே பாதுகாக்க முடியுமெனச் சமூக ஆர்வலர்கள் ​தெரிவிக்கின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .