2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மக்கள் பிரதிநிதிகளுக்கு எங்கள் ஆட்சியில் கட்டுப்பாடு’

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

மதுபான விற்பனை நிலையம், மணல், கருங்கல், இரத்தினக்கல் வியாபாரம் போன்றவற்றுக்கு அனுமதிப்பத்திரம் பெற்றிருப்பவர்கள், தங்களது காலத்தில் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியாது என்று, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இரத்தினபுரிய மாநகர சபை மண்டபத்தில், இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தங்களது ஆட்சி வந்தால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி இரத்து செய்யப்படும் என்றும் நாட்டின் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வலுகைகள், 90 சதவீதம் இரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் வளங்கள், நாட்டு மக்களுக்கு உரிய முறையில் சென்றடையாதமையாலேயே, பொருளாதார முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் இதனால், நாட்டின் வளங்கள், பிற நாட்டிடம் அடகு வைக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஏற்படும் முயற்சிகளுக்கு, அவர் கண்டனம் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .