2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மண்டியிட்ட விவகாரத்தை ‘செந்திலிடம் முறைியிட்டிருக்கலாம்’

Kogilavani   / 2018 ஜனவரி 23 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்காலிடச் செய்த சம்பவத்தை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூம் மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சும் வன்மையாகக் கண்டிப்பதாக, மாகாணக் கல்வி அமைச்சர்

எம்.ராமேஸ்வரன் தெரிவித்தார்.   

“இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அதிபர், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் முறையிட்டிருந்தால் அன்றே இதற்குத் தகுந்த நடவடிக்கையை எடுத்திருப்போம். இருந்தாலும், பரவாயில்லை இவ்வாறான செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்றும் அவர் கூறினார்.   

ஹட்டனில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,   

 “நாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களாக இருக்கலாம். ஆனால் நாம் யாரிடமும் மண்டியிடத் தேவையில்லை. யாரிடமும் எதையும் கெஞ்சிக் கேட்பதற்கும் தயாராக இல்லை. எமது உரிமைகளை நாம் தட்டிக் கேட்டே பெற்றிருக்கின்றோம்.   

 “ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக நாங்களும் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளோம். ஏனெனில், இவ்வாறான செயற்பாடுகள் இனியும் தொடருமாக இருந்தால், ஏனைய பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியாது.   

 “மத்திய மாகாணத்தை பொறுத்தவரையில், தமிழ்ப் பாடசாலைகளில் இருக்கின்ற எந்தவோர் அதிபரையும் முதலமைச்சருக்கு  கீழ், அடிப்பணிய வைத்ததில்லை. தமிழ் கல்வி  தொடர்பில், மத்திய மாகாண முதலமைச்சர் முழு அதிகாரத்தையும் எங்களிடம் தந்துள்ளார்.   

 “நாங்கள் எந்தவோர் அதிபரையும் கல்வி அதிகாரிகளையும் ஆசிரியர்களையும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதுமில்லை. பாடசாலைகளை நல்ல முறையில் வழிநடத்துவதற்கு அவர்களுக்கு நாங்கள் முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளோம். கல்வித்துறையில் மலையகம் அபிவிருத்தி காண வேண்டும் என்பதே, எமது நோக்கம்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .