2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘மத்திய மாகாணத்தில் புலமைப்பரிசில் பரீட்சை இனி இல்லை’

ஆ.ரமேஸ்   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில், ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையை, எதிர்வரும் காலத்தில் தடை செய்துவிட்டு, அதற்கு பதிலாக, ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன தெரிவித்தார்.  

நுவரெலியா மாவட்டத்துக்கு வலப்பனை கல்வி வலயத்துக்குட்பட்ட இராகலை தமிழ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (27) இடம்பெற்றபோது,

 அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைத் தோற்றும் மாணவர்கள், உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், எனவே, இப்பரீட்சையை, மத்திய மாகாணத்தில் நடத்தாது தடை செய்ய, கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி, விரைவான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.  

இந்தப் பரீட்சையில், மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகள், அவர்களை மன ரீதியாக பாதிப்பதாகவும் அவர் கூறினார். 

அத்துடன், நாட்டின் தேசிய கீதத்தில், அனைவரும் ஒருதாய் மக்கள் என பாடிக்கொண்டு, தமிழ், சிங்கள, முஸ்லிம் என வேறுபடுத்திக் கொள்ளும் நிலையை, பாடசாலைகள் மட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்றும் அதற்கென, மத்திய மாகாணத்தில், தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகள் என வேறுபாடு காட்டாமல், அனைத்து இன மாணவர்களும் ஒரே இடத்தில் கல்விகற்கும் நிலையை உருவாக்கப்போவதாகவும் அவர் கூறினார்.  

இதேவேளை, பெருந்தோட்டத் தேயிலை தொழிற்றுறையின் ஊடாக, கடந்த காலங்களில், அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி அடையச் செய்தது என்று கூறிய அவர், எனினும் தற்போது, தனியார் கம்பனிகளுக்கு இத்தொழிற்றுறை பகிர்ந்தளிக்கப்பட்டதன் பின்னர், தேயிலை மலைகளே அலங்கோலமாகிவிட்டன என்றும் அவர் கூறினார்.  

இதே நிலை தொடர்ந்து நீடித்தால், இன்னும் ஐந்து வருடங்களில், தேயிலைத் துறை அழிந்து போய்விடும் என்றும் இந்த விடயத்தில், அரசாங்கம் மறுபரீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .