2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மலையக ரயில்சேவை வழமைக்குத் திரும்பியது

Kogilavani   / 2017 நவம்பர் 21 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயில், வட்டவளை ரொசல்ல 107ஆம் கட்டைப் பகுதியில், இன்றுக் காலை 10.30 மணியளவில் தடம்புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள்,  பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் திருத்தப்பணிகளின் பின்னர், மலையகத்துக்கான ரயில் சேவை, இன்று மாலை வழமைக்குத் திரும்பியதாக, ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் எஞ்சினிலிருந்து இரண்டாவது பெட்டியின் சில்லு ஒன்றே, தண்டவாளத்திலிருந்து விலகியதாக நாவலப்பிட்டி ரயில்வே நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்

ரயில்வே அதிகரிகளால் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கொழும்பிலிருந்து ரொசல்ல வரையிலும் பதுளையிலிருந்து ஹட்டன் வரையிலும் ரயில் சேவைகள் மட்டுபடுத்தப்பட்டன.

திருத்தப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், ரயில் போக்குவரத்து வழமைகுத் திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .